
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மாநாடு படத்தின் புரமோஷன் தொடர்பாக நேற்று டிவிட்டர் ஸ்பேஸில் நடிகர் சிம்பு மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது சிம்பு ரசிகர்கள் அவரிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பினர்.

அதில் ஒரு ரசிகர்கள் ‘நீங்க சரக்கு அடிப்பீங்களா?’ என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சிம்பு ‘சரக்கு அடிப்பதை நிறுத்தி ஒரு வருஷம் ஆச்சு’ என மிகவும் ஓப்பனாக பதிலளித்தார்.
பொதுவாக நடிகர்கள் தங்களின் கெட்ட பழக்கங்கள் பற்றி பொதுவெளியில் பேச மாட்டார்கள். ஆனால், சிம்பு அதை வெளிப்படையாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





