
நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், விஜய் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜயின் பிறந்தநாள் டிரீட்டாக அவர் தற்போது நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.

இந்நிலையில், நீலாங்கரையில் வீட்டின் முன்பு விஜயின் ரசிகர்கள் சிலர் கூடி, விஜயை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால், விஜய் வீட்டில் பணிபுரிபவர்கள் அவர்களை அங்கிருந்து போக சொல்ல, விஜயை பார்க்காமல் போக மாட்டோம் எனக்கூறி வீட்டின் முன்பு அவர்கள் தர்ணா செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசி அங்கிருந்து போகுமாறு கூறினால், இதையே மற்ற ரசிகர்களும் செய்வார்கள் என்பதால் விஜய் அவர்களை பார்க்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.





