
போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல். வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷன் டமாக்காவாக இருக்குமாம்.இதற்கான கதையை ஹெச்.வினோத் எழுதி முடித்துவிட்டார். இப்படத்தை பல்வேறு இடங்களில் 7 மாதங்களில் முடித்துவிட்டு அடுத்த வருடம் அல்லது நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





