Connect with us
pri_main_cine

Cinema News

விஜய் டிவி பிரியங்கா – கணவருடன் அப்படி என்ன பிரச்சினை…? வைரலாகும் அந்த சம்பவம்…!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொகுப்பாளராக இருந்து வருகிறார். மேலும் மூன்று முறைகளுக்கு மேல் சிறந்த தொகுப்பாளர் விருதையும் வென்றுள்ளார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு செல்லமாக மாறியுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே.

pri1_cine

அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களம் இறங்கியவர் மக்களுக்கு அபிமான போட்டியாளராக மாறினார். வீட்டிற்குள் இவர் செய்யும் ரகளைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த நிலையில் சீசன் முடிந்ததோடு மட்டுமில்லாமல் இவரின் கணவரை பற்றியும் எக்கச்சக்கமாக கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன.

pri2_cine

பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் 100 நாள்களை தாண்டியும் ஒரு நேரமாவது இவரது கணவரை பற்றி பேசவே இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் இவரின் தம்பிக்கு குழந்தை பிறந்ததை புகைப்படம் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இவர் புகைப்படத்தை பார்க்கும் போது இவரை சுற்றி யாரும் இல்லை என தெரிந்தது.

pri3_icne

இதனை கவனித்த நெட்டிசன்களில் ஒருவர் ’திருமணம் ஆன பிறகும் எப்படி நிதானமாக நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, உன்னை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியம்” என்று பதிலளித்தார் பிரியங்கா. இந்த பதில் விஷயங்களை தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அவரது பதிலைக் கேட்டு ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். இந்த பதில் மூலம் இன்னும் அவர் கணவருடன் ஏதோ ஒரு விதத்தில் புரிதலில் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top