ஆசிரியர் தேர்வில் நடிகை புகைப்படம்… பீகார் ஆசிரியர் தேர்வு மதிப்பெண்ணில் குழப்பம்..

Published on: June 25, 2021
---Advertisement---

bcf0747b28d13121fbf0caf687e21a1e

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ரிஷிகேஷ் குமார் என்பவர் சமீபத்தில் தேர்வு எழுதினார். இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். எனவே, தனது மதிப்பெண் எவ்வளவு என தெரிந்து கொள்ள இணையத்தில் மதிப்பெண் பட்டியலை பார்த்தார். ஆனால், அதில் அவருக்கு பதில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இருந்தது.  இதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 

இந்த தகவலை அவர் தனது சமூகவலைத்தல பக்கங்களில் பகிர இந்த விவகாரம் வைரலாக பரவியது. இதற்கு முன் இந்திராகாந்தி மற்றும் சன்னி லியோன் படங்கள் ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியலில் இஅடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment