
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஜூன் 28ம் தேதி காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது மேலும் ஒரு வாரம், அதாவது, ஜூலை 5ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திற்கும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 27 ம்வாட்டங்களில் ஜூன் 28ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





