
Cinema News
ரசிகர்களால் மறக்கவே முடியாத டாப் 5 விஜய் படங்கள்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு சம்பவம்…
Published on
தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவரை விட அதிகமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் அவரது திரை வாழ்வில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம் என்று ஒரு சில படங்கள் இருக்கிறது அந்த படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
பூவே உனக்காக – இளைய தளபதி விஜய்க்கு முதல் மெகா ஹிட் திரைப்படமாக வெளியானது. விக்ரமன் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகும் போது இவரை படத்தில் நடித்தவர்களே நம்பவில்லை என்பதே நிஜம். ஆனால், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் சூப்பர் ஹிட்டை பெற்றார் விஜய்.
கில்லி – அதன் பிறகு வெற்றி தோல்வி வந்து கொண்டே இருந்தது. இளம் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்தவரை சூப்பர் ஸ்டாருக்கு பிறகு இவர் தானோ என தமிழ் திரையுலகை வியக்க வைத்தது தரணி இயக்கிய கில்லி-யின் மெகா ஹிட். திரைப்படம் வெளியாகி 4 வருடங்கள் கழித்து டிவியில் போடப்பட்ட ஒரே திரைப்படம்.
தலைவா – மெகா ஹிட் திரைப்படங்களுக்கு நடுவே இந்த படம் என யோசிக்க வேண்டாம். இது விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம் . time to lead எனும் வாசகத்தை அழித்த பிறகே இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் தமிழகத்துக்கு முன்னர் கேரளாவில் ரிலீஸ் ஆகியுள்ளது என அறிந்த ரசிகர்கள் கேரளாவுக்கு படையெடுத்த வரலாறு இந்த படத்திற்கு உண்டு. ரிலீஸ் தாமதமானதால் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எல்லாம் நடந்தது. அதனாலேயே இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படம்.
துப்பாக்கி – அதுவரை மாஸ் கமர்சியல் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த தளபதி விஜய்-ஐ முதன் முறையாக ஒரு ஸ்டைலான ராணுவ வீரராக காட்டிய விதமும், விறுவிறுப்பான கதைக்களமும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது. படம் தாறுமாறு ஹிட்.
இதையும் படியுங்களேன் – இளையராஜா மீது அவதூறு.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனரின் தில்லாலங்கடி வேலை.. வெளிப்பட்ட உண்மைகள்..
மாஸ்டர் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது மாறுபட்ட பரிணாமத்தை காட்டிய திரைப்படம் என்றே கூறலாம். கொரோனா காலகட்டத்தில் பெரிய படங்களே OTTயில் வரும் சூழலில் தமிழக திரையரங்கை காப்பாற்றிய திரைப்படம் மாஸ்டர் என்றே கூறலாம்.அதனால் இந்த படமும் ரசிகர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல் தான்.
இது போல காதலுக்கு மரியாதை, குஷி, சச்சின் , திருப்பாச்சி, மெர்சல், பிகில் என லிஸ்ட் பெரிதாக இருந்தாலும் மேற்கண்ட 5 படங்கள் விஜய் ரசிகர்களுக்கு வெற்றி என்பதை தாண்டி மறக்க முடியாத சம்பவமாக இருந்தது என்பதே உண்மை.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...