
பிரபல நடிகை எமிஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலர் மூலம் கர்ப்பமாகி சமீபத்தில் குழந்தை பெற்றார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் எமி ஜாக்சன் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர்-நடிகைகள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
இந்நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவற்றில் ஒரு புகைப்படம் கடற்கரையில் பிகினி உடையில் குழந்தையை தூக்கி கொண்டு எமி கொஞ்சியது இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது
குழந்தை பெற்ற பின்னராவது அடக்க ஒடுக்கமாக இருக்கலாமே? குழந்தையுடன் இருக்கும் போது கூட பிகினி உடையா? என நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்து வருகின்றனர். இருப்பினும் அந்த ஒரு புகைப்படத்தை தவிர மற்ற புகைப்படங்கள் அனைத்தும் தாய்மை பாசத்துடன் குழந்தையை அரவணைத்து இருக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது