சேத்துப்பட்டுனா என் வீடுதான் ஞாபகத்துக்கு வரணும்.. விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஆசையா?…

Published on: July 2, 2021
---Advertisement---

b6fe15d13f1ff73342c8e1433eb75458

சினிமா நடிகர்கள் என்றாலே பல கோடிகளில் ஆடம்பர பங்களாவை கட்டி அதில் குடியிருப்பது வழக்கமான ஒன்றுதான். அதிலும் சென்னையில் ஒரு வீடும், ஓய்வெடுப்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் வீடுகளை கட்டி வைத்திருப்பார்கள். இதில், சில நடிகர்கள் பண்ணை வீடுகளை கட்டி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கு சென்று ஓய்வெடுப்பார்கள்.

762266938483919941a1d70d87319133

தமிழ சினிமா நடிகர்களுக்குள் தற்போது ரூ.100 கோடிக்கு மேல் ஆடம்பர பங்களாவை கட்டுவது டிரெண்ட் ஆகி வருகிறது. விஜய் ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடி செலவில் வீடு கட்டியுள்ளார். தனுஷ் சென்னை போயஸ்கார்டன் பகுதியில் ரூ.150 கோடி செலவில் ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.

d1377d4895e5a33ee22e0ef2949f79e4

இந்நிலையில், பல திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கும் அப்படி ஒரு வீட்டை கட்ட ஆசை வந்துள்ளதாம். இதற்காக சென்னையின் பல இடங்களில் இடம் பார்த்தும் எதுவும் செட் ஆகாமல் தற்போது சேத்துபட்டில் வீடு கட்டுவது என அவர் முடிவெடுத்துள்ளார்.

5d3be1c6e7ec658cf3ce715750c74ce3

கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில்தான் விஜய்சேதுபதி தற்போது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரின் மகள் சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதால் அங்கு வீடு கட்டை ஆசைப்படுகிறாராம். சேத்துப்பட்டை அவர் தேர்ந்தெடுத்ததற்கு மேலும் ஒரு காரணமும் இருக்கிறது.

ea486d083dae84309b3fcc176f13214d

சேத்துப்பட்டில் எந்த சினிமா பிரபலத்தின் வீடும் இல்லை. அதோடு, போயஸ்கார்டன் என்றால் ரஜினி வீடு, ஆழ்வார் திருநகர் என்றால் கமல் வீடு, நீலாங்கரை என்றால் விஜய் வீடு என அப்பகுதிகள் ஒரு அடையாளமாக மாறிவிட்டது போல் சேத்துப்பட்டு என்றால் அங்கு விஜய் சேதுபதி வீடு ஒரு அடையாளமாக மாற வேண்டும் என குழந்தை போல் அவர் ஆசைப்படுகிறாராம்..

இதுவும் நல்லாத்தான் இருக்கு,…. 

Leave a Comment