செக்கப் ஓவர்!…சென்னை திரும்பும் நடிகர் ரஜினி…பரபர அப்டேட்….

Published on: July 7, 2021
---Advertisement---

1b613526d2fa71966c747c1fb9409671

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்படு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர் விரைவில் நலம் அடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவர் சிகிச்சையில் குணமடைந்தார். அதேபோல், அமெரிக்காவில் மீண்டும் அவருக்கு ஒரு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

ca736fd4e6508569e5ffa420b0cb731a

அதன்பின் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது அண்ணாத்த படத்தின் வேலையை முடித்து கொடுத்து விட்டு, மருத்துவ பரிசோதனைக்காக சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார். அவருடன் அவரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்றார்.மேலும், அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த மாயோ மருத்துவமனை (Mayo clinic) வளாகத்தில் மகளுடன் அவர் நடந்து வரும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், அமெரிக்காவில் 3 வாரம் தங்கியிருந்த ரஜினி நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Comment