அஜித்தால் இந்தியன் 2’ படப்பிடிப்பில் மாற்றமா? பரபரப்பு தகவல்

Published on: January 31, 2020
---Advertisement---

419d21d0a5c6b16d5ea025b6d3b261bc-1

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள முக்கிய ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற இருந்த நிலையில் இதற்கான பணிகள் அந்த ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் இந்த படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் இதே ஸ்டூடியோவில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது

ஆனால் அஜித் நடிக்கும் படத்தின் ஸ்டூடியோவில் வேறு எந்த படத்தின் படப்பிடிப்பும் இருக்கக்கூடாது என அவர் நிபந்தனை விதித்ததால் அந்த ஸ்டுடியோ ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்தியன் 2 படக்குழுவினர் தற்போது வேறொரு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்

அஜித்தின் இந்த கண்டிஷன் காரணமாக ‘வலிமை’ படத்தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு என்றாலும் அதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறாராம்.

Leave a Comment