
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாம் சீசனில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார். ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது சில திரைப்படங்களில் அவர் நடித்தார். அப்படங்கள் வெற்றியும் பெற்றது.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் ரைசா கவர்ச்சியான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து பகிர்ந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. தற்போது ரைசா அந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.





