
சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் தற்போது ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இன்னும் ஓரிரண்டு கட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டது.
இதனால் இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று கருதப்பட்ட நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஒர்க் மிக அதிகமாக இருப்பதால் தங்களுக்கு ஒரு வருட காலம் காலஅவகாசம் வேண்டும் என கம்ப்யூட்டர் பணி செய்யும் கலைஞர்கள் கூறிவிட்டார்களாம்
எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையும் என்றும் அதன் பின்னரே இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் படம் வெளியாக வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கும் இன்னொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அந்த படம் தொடங்கவே ஏப்ரல் அல்லது மே மாதம் ஆகும் என்பதால் அந்த படமும் இந்த ஆண்டு வெளிவர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் படம் வெளிவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது