அமெரிக்காவில் ரசிகர்களுடன் ரஜினி.. தாறுமாறா வைரலாகும் புகைப்படம்….

Published on: July 8, 2021
---Advertisement---

693011960b93bfbcea5819b246ef9e4a

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்படு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர் விரைவில் நலம் அடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவர் சிகிச்சையில் குணமடைந்தார். அதேபோல், அமெரிக்காவில் மீண்டும் அவருக்கு ஒரு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

648c831078136fea90f5433bc975350d

அதன்பின் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது அண்ணாத்த படத்தின் வேலையை முடித்து கொடுத்து விட்டு, மருத்துவ பரிசோதனைக்காக சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார்.

f6271a1c5b224cc43ace24dce55e3926

அவருடன் அவரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்றார். மேலும், அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த மாயோ மருத்துவமனை (Mayo clinic) வளாகத்தில் மகளுடன் அவர் நடந்து வரும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

2eab9e604ac96f273151ded268f2284b

அமெரிக்காவில் 3 வாரம் தங்கியிருந்த ரஜினி இன்று அதிகாலை சென்னை திரும்புகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த போது அங்குள்ள ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

d9e519eeb913fb620a62ace79ee1dc75

Leave a Comment