நயன்தாரா கல்யாணத்தில் கேவலமாக நடந்துக்கொண்ட டிடி – தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Published on: June 28, 2022
dd dp
---Advertisement---

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளன டிடி!

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி, நல்ல அழகு, பேச்சு திறமை என ரசிகர்களை கவர்ந்தார். காபி வித் டிடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நட்சித்திரங்களுடன் கலகலப்பாக பேசி லகுவாக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சினிமா குறித்தும் கேள்விகளை கேட்டு பதிலை கறந்திடுவார்.

dd1
dd1

இவருக்கு பல நடிகர் நடிகைகள் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நயன்தாரா கல்யாணத்தில் கலந்துக்கொண்ட டிடி அங்கு நடிகர் ஷாருக்கானை இறுக்கமாக கட்டியணைத்தை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அந்த பதிவில், ” நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், ‘இவ்வளவு வருடங்கள், பல நினைவுகள், நீங்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள மகிழ்ச்சி, சார், அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர், சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர் சார். உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக தினமும் நான் பிரார்த்தனை செய்வேன்.

இதையும் படியுங்கள்: எப்பா தீனா நீ பெரிய ஆளுதான்…! லோகேஷுக்கு அந்த பரிசை கொடுத்து அதிர்ச்சியாக்கிய சம்பவம்…

dd1
dd1

எங்கள் கிங் கான் இந்தத் துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். ஷாருக்கான் சார் உங்களைப் போல் இதற்கு முன்பும், இனி மேலும் யாரும் இருக்க முடியாது சார். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுத்த டைரக்டர் அட்லி டார்லிங், தேங்க் யூ சோ மச். ஜவான் படம் 1000 கோடி வசூல் பிளாக் பஸ்டர் படமாக மெகா ஹிட்டாக என்னுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவை கண்ட நெட்டிசன்ஸ் யாரை பார்த்தாலும் உடனே ஓடிப்போய் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்திடுவீங்களா? என விமர்சித்துள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.