
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் பெறுபவர். இவர் நடித்தால் அந்த படம் ஹிட் என்கிற நிலையை அவர் உருவாக்கி விட்டார்.
நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இருவரும் லிவ் இன் டூகெதர் முறைப்படி சேர்ந்து வாழ்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார் நயன்தாரா. அதோடு, அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கடுப்பேற்றி வந்தார். மேலும், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அடிக்கடி தனி விமானம் மூலம் கொச்சின் சென்று வருகின்றனர்.

சமீபகாலமாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், திருமணத்திற்கு நிறைய செலவாகும் எனவும், பணத்தை சேமித்து வருவதாகவும் பதில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நயன்தாரா ஏன் அடிக்கடி கொச்சின் சென்று வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரின் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். எனவே, அவரை பார்க்கத்தான் அடிக்கடி காதலனுடன் அவர் கொச்சின் சென்று வருவது தெரியவந்துள்ளது. ஏனெனில், அவரின் சகோதரர் லெனோ ஐக்கிய அரசு எமிரேட்ஸில் வசித்து வருவதால் தனது குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பிலும் நயன் இருக்கிறார். ஒருபக்கம், தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நயன்தாராவை அவரின் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்களாம்.

நயன்தாரா நடிப்பில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும், ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே, திருமணம் செய்து கொள்வது பற்றி நயன்தாரா தீவிரமாக யோசித்து வருகிறாராம்.
எனவே, விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.





