அஜித்திற்கு 105. நயன் 10.. விக்கி 11.. அனிருத் 5.! மிச்ச மிதியில் படம் செஞ்சா உருப்படுமா..?

Published on: June 29, 2022
---Advertisement---

அஜித் தற்போது அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். மூவரும் இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

Also Read

இப்படத்தை தொடர்ந்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தின் நடிக்க உள்ளார். இது அஜித்தின் 62வது படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கான சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் அஜித்தின் சம்பளம் தான் அப்போது பேசுபொருளாக இருந்தது. தற்போதும் அது மீண்டும் பேசு பொருளாகி உள்ளது. அதாவது அஜித்திற்கு அந்த படத்தின் 105 கோடி சம்பளம் பேசி உள்ளனராம்.

இதையும் படியுங்களேன் – விஜயகாந்தின் வள்ளல் மனசு.. சத்யராஜுக்காக காலை 6 மணிக்கே நடந்த சம்பவம்… நெகிழ்ச்சி பதிவு…

அது போக நயன்தாராவுக்கு 10 கோடி, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு 11 கோடி, அனிருத்திற்கு 5 கோடி என்று சம்பளம் பேசி உள்ளனராம். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதத்தை பட நடிகர்களுக்கு சம்பளமாக கொடுத்து விட்டால், மிச்சம் உள்ள பணத்தை வைத்து படத்தை எடுத்தால் அது எப்படி தரமான படமாக இருக்கும் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.