விஜயகாந்தும் மீனாவும் டிரெண்டிங்!.. இப்போ அப்படியொரு வேலையை பார்த்த ஏவிஎம் நிறுவனம்!..

Published on: June 30, 2022
---Advertisement---

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பழமொழி அதுபோல டிரெண்டிங்கில் இருக்கும் போதே தேற்றிக் கொள் என்கிற புதுமொழியை ஏவிஎம் நிறுவனம் தனது புதிய ட்வீட் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.

நடிகர் விஜயகாந்த் காலில் விரல் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை மற்றும் ஆறுதலான வார்த்தைகளை கூறி வருகின்றனர்.

இன்னொரு புறம் நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகரை நுரையீரல் பிரச்சனை காரணமாக இழந்த நிலையில், விஜயகாந்த் மற்றும் மீனா நடித்த சேதுபதி ஐபிஎஸ் படம் குறித்த பரம ரகசியத்தை தற்போது ஏவிஎம் நிறுவனத்தை நடத்தி வரும் அருணா குகன் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா நடித்த சூப்பர் ஹிட் படமான சேதுபதி ஐபிஎஸ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், மணிக்கூண்டு ஒன்றில் பாம்ப் செட் பண்ணப் பட்டிருக்கும்.

அந்த பாம் வெடித்து மக்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக தனது உயிரை துச்சமாக நினைத்து விஜயகாந்த் மணிக்கூண்டில் தொங்கியபடி செய்த சாகச காட்சியில், டூப் போடாமல் நடித்துள்ளார் என்கிற ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் அருணா குகன்.

மேலும், அவ்ளோ ஹைட்டில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் ரோப் கூட பயன்படுத்தாமல், வேறு ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி விஜயகாந்த் எப்படி நடித்தார் என்பதை எனக்கு என் தாத்தா ஏவிஎம் சரவணன் கூறியுள்ளார் என அவருடைய பேத்தி தற்போது அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

இப்போதிருக்கும் டெக்னாலாஜ் தொழில்நுட்பம் எல்லாம் இல்லாத அந்த காலத்தில் ஏகப்பட்ட அசற வைக்கும் காட்சிகளில் தமிழ் சினிமா நடிகர்களும் நடித்து அசத்தி இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கத்தான் செய்கிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.