Connect with us

Cinema News

சினிமாவில் நடிகைகளை ரொம்பவே ஏமாத்துறாங்க!.. கன்ட்ரோல் பண்ண முடியாமல் கதறிய டாப்ஸி!..

ஆடுகளம் படத்தில் “வெள்ளாவி வச்சுத் தான் வெளுத்தாங்களோ” என தனுஷ் மட்டுமின்றி தமிழ்நாட்டு ரசிகர்கள் அனைவரையும் வாய் பிளந்து பாட வைத்தவர் நடிகை டாப்ஸி.

வந்தான் வென்றான், காஞ்சனா 2, ஆரம்பம், கேம் ஓவர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என மும்பையிலேயே செட்டில் ஆனார்.

நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து கங்கனா ரனாவத்தை ஆள் அட்ரஸே இல்லாமல் காலி செய்தததில் பாதி பெருமை இவருக்கே சேரும், மீதியை கங்கனா ரனாவத்தே பார்த்துக் கொண்டது தனிக் கதை.

உமன் சென்ட்ரிக் படங்கள் மற்றும் போல்டான படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியவர் டாப்ஸி. ஆனால், சமீப காலமாக ஏகப்பட்ட இளம் கவர்ச்சி குயின்களின் வரவால், இவருக்கும் அங்கே மார்க்கெட் ரொம்பவே டல் அடிக்க ஆரம்பித்து விட்டது.

 

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி படம் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த நிலையில், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக்கில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த படம் வரும் ஜூலை 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் டாப்ஸி.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், என் வாழ்நாளிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் சபாஷ் மித்து தான்.  ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் சில முன்னணி ஹீரோக்களின் சம்பளத்தில் பாதி கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என படாரென பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மேலும், சினிமா துறையில் Gender Equality என்பது கொஞ்சம் கூட கிடையாது. இங்கே நடிகைகளை பலரும் சம்பள விஷயத்தில் ஏமாற்றி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

சபாஷ் மித்துவின் பட்ஜெட் மொத்தமே 30 கோடி ரூபாய் தான் என்றும் நடிகை டாப்ஸிக்கு ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 2 முதல் 3 கோடி ரூபாய் தான் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top