விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார்… எவ்வளவு வரி?…என்ன பிரச்சனை?….

Published on: July 14, 2021
---Advertisement---

a8dc0766e96ba6ad804a6879b05eb56a

நடிகர் விஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து விலை உயர்ந்த ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இந்திய சட்டப்படி வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்தால் அதற்குண்டான வரியை செலுத்த வேண்டும். அந்த வரி அரசுக்குதான் செல்லும். விஜய் வாங்கிய கார் குறைந்த பட்சம் ரூ.6 கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, சில லட்சங்கள் வரியாக செலுத்த வேண்டும்.

ஆனால், அந்த வரியை கட்ட வேண்டாம் என கருதிய விஜய் நீதிமன்றத்தில் விலக்கு கேட்டு மனு தொடர்ந்தார். 8 வருடம் கழித்து தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது. விஜயின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளிதுள்ளார்.அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்துள்ளார்.

c847dd7770b41b588d44068383fa973b

இந்த விவகாரத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வவோம். ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய் நடித்தபோது ஷங்கரும், விஜயும் இணைந்து அந்த காரை ஆர்டர் செய்தனர். ஷங்கர் வரியை கட்டிவிட்டு காரை பயன்படுத்த துவங்கிவிட்டார். ஆனால், வரியை கட்டாததால் கடந்த 9 வருடங்களாக அந்த காரை விஜய் பயன்படுத்தவில்லை. அவரின் டிரைவர் அந்த காரை வாரத்திற்கு ஒரு முறை துடைத்துவிட்டு மூடி வைத்து விடுவார்.

2012ம் ஆண்டு இந்த காருக்கு விஜய் செலுத்த வேண்டிய வரி ரூ.80 லட்சம். தற்போது அது பாதியாக குறைந்துவிட்டது. 

620925c29cc39a9bb22db153a99d449c

திரைத்துறையில் இந்த காரை இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேசன், கலாநிதி மாறன், ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் வாங்கி வரி கட்டி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், விஜய் மட்டும் வரியை கட்ட யோசித்து இத்தனை வருடங்களாய் காரை அப்படியே வைத்திருக்கிறார்.

தற்போது நீதிமன்றம் கையை விரித்ததோடு, அபராதமும் விதித்துவிட்டதால் விரைவில் அந்த வரியை விஜய் கட்டிவிட்டு காரை பயன்படுத்த துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
a

Leave a Comment