முன்னனி நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டிய நயன்…! போயஸில் ராணியாக குடியேறும் சம்பவம்…

Published on: July 2, 2022
nayan_main_cine
---Advertisement---

அண்மையில் நடிகை நயன்தாரா-விக்கியின் திருமணம் கோலாகலமாக சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்று சமீபத்தில் தான் திரும்பினர். திரும்பிய உடனே மும்பைக்கு பறந்து விட்டார் நயன்.

nayan1_cine

அங்கு அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் நயன். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் உள்ள அன்பு காரணமாக அவர் இருந்த எரியாவிற்கு பக்கத்திலயே ஒரு வீட்டை வாங்கி உள்ளார் நயன். கிட்டத்தட்ட 16500 சதுர அடியில் மூன்றாவது தளம் மற்றும் நான்காவது தளத்தை வாங்கியுள்ளார்.

nayan2_cine

மிக பிரம்மாண்டாம உருவாகும் அந்த ஃபிளாட்டில் பணியாளர்களுக்கு என்று தனி லிஃப்டாம். விக்கி நயனுக்கு என்று தனி லிஃப்டாம். மேலும் பாத்ரூம் மட்டும் 1000 சதுர அடியில் அமைக்கப்போகிறார்களாம். இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் இவர்கள் கூட இப்படி ஒரு வீட்டை கட்டியதில்லையாம்.

nayan3_cine

இண்டீரியர் வேலைகளை செய்ய மும்பையில் இருந்து ஆள் வரவழைக்கப்பட்டு கட்ட போகிறார்களாம். அவர்கள் ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர் வீட்டிற்கு இண்டீரியர் வேலை பார்த்தவர்களாம். இதற்காக சுமார் 25 கோடி தொகைப் பேசப்பட்டுள்ளதாம். மேலும் குட்டி தியேட்டரும் வீட்டிற்குள்ளேயே அமைக்கப் போகிறார்களாம். எல்லாம் சரிதான் வரித்துறையில் இருந்து யாரும் வராமல் இருந்தால் சரிதான்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.