
சினிமாவில் பல நடிகைகள் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடிகர்களுடன் லிப்லாக், படுக்கையறை காட்சி என நெருக்கம் காட்ட தாயாராக இருப்பார்கள். ஆனால் சிலர் அதை தவிர்த்து குடும்ப பாங்கான படங்களை தேர்வு செய்வார்கள்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிங்காரம் படத்தின் மூலம் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை பாலிவுட் நடிகையாக தற்போதைய பிம்பத்தை எடுத்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ்.
தமிழில், சில ஆண்டுகள் படங்கள் இல்லை என்றாலும் பாலிவுட், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன்பின் இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் மற்றும் மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்து பிரபலமானார். ஆடை விஷயத்தில் தாராளம் காட்டி வந்த அதிதி ராவ், தற்போது லிப்லாக், பெட் சீன்களுக்கு ஓகே என்று கூறியுள்ளார்.
சக நடிகர்களுடன் உதட்டு முத்தக் காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க எந்த ஒரு பிரச்சனை இல்லை எனவும், மற்ற நடிகைகள் மாதிரி அதைச் செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன் என அடம் பிடிக்கவும் மாட்டேன் என அதிதி ராவ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் ஒரு கண்டிஷன் என இக்கு வைத்துள்ளார்.
படத்தின் காட்சிகள் உண்மையாகவும் தத்ரூபமாகவும் இருந்தால் மட்டுமே அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பேன் எனவும் வேண்டுமென்றே நுழைக்க நினைத்தால் வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு பின்பும் அவருக்கு படவாய்ப்புகள் குவிகிறதா என்று பார்ப்போம்.





