
பாலிவுட்டில் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை திரைப்படமாக உருவானது. அதில், மறைந்த நடிகர் சுஷாந்த் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது தோனிக்கு முன்பே இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து, கேப்டனாக உயர்ந்த கங்குலியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது.

கங்குலி தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அவர் பதவி வகித்து வருகிறார். தன் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க கங்குலி சம்மதம் தெரிவித்துவிட்டார். அவரின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை.
இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





