வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்… பரபர அப்டேட்…..

Published on: July 15, 2021
---Advertisement---

3e2c805be7e9cfd526c20df2a4b5aab7

அசுரன் திரைப்படத்திற்கு பின் சூர்யாவும் – வெற்றி மாறனும் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. 

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். வாடிவாசல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஒருபக்கம் சூரி, விஜய் சேதுபதியை வைத்து வெற்றி மாறன் துவங்கும் படப்பிடிப்பு துவங்கியது. அதேபோல், சூர்யாவும் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். எனவே வாடிவாசல் படம் துவங்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

f3af53c8c016f8daddd684f493442341

இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் அடுத்த திரைப்படம் வாடிவாசல் என்பது உறுதியாகியுள்ளது. வாடிவாசல் திரைப்பட பணிகள் துவங்கியிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment