சிலர் மாடல் மற்றும் நடிகையாக ஆசைப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காது. எனவே, தங்களை அவர்களே விளம்பரப்படுத்திக்கொள்ள பணம் செலவு செய்து போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்வார்கள்.

Also Read
இதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாவதோடு, மாடலிங் மற்றும் சினிமா துறையில் சிலருக்கு வாய்ப்பும் கிடைப்பதுண்டு.

அதில் ஒருவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் பைக் மீது அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட சில குறும்பு நெட்டிசன்கள் ‘அட பைக்கு மேல குதிர’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.




