துவங்கியது ‘விக்ரம்’ பட படப்பிடிப்பு – வைரலாகும் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள்…..

Published on: July 16, 2021
---Advertisement---

206d1db5708b6f61402ccbf516428400

மாஸ்டருக்கு பின் லோகேஷ் கனகரஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என 4 வில்லன்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

f815fb6b2d7e0b047a3983adf54097c0

மாநாடு, கைதி, மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும், கலைஞானி கமலும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வீடியோவாக வெளியிட்டு கவனம் ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ்.

92679e091ad21a419384a8d27c70e805

மேலும், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் டெரர் லுக்கில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் என மூவரும் இடம் பெற்றுள்ளனர்.  மூன்று பேரும் நரைத்த முடி மற்றும் தாடியுன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளனர்.

cd61cb6c55f386e57e253bee1ba141d0

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினருடன் கமல்ஹாசன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
 

Leave a Comment