பரபர அரசியல் ஆக்‌ஷன்…டபுள் ரோலில் ராம்சரண்…தெறிக்கும் ஷங்கர் பட அப்டேட்….

Published on: July 17, 2021
---Advertisement---

ed99d73930def7177923145b72116368

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், காதலன், முதல்வன், அந்நியன், சிவாஜி, ஐ, எந்திரன் என அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக கருத்தை கிராபிக்ஸ் கலந்து பேண்டஸி திரைப்படமாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே..

இந்தியன் 2 திரைப்படம் தொடர்பான வழக்கில் ஷங்கருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுடையது. இது அரசியல் பரபர ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தில் ராம்சரண் முதலமைச்சராக நடிக்கவுள்ளார். அதோடு, இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தில் நடிகை கியரா அத்வானி நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். 

இப்படம் தொடர்பான பணிகளை செய்ய ஷங்கர் தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment