">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விரைவில் டீசர்.. தீபாவளிக்கு முன்பே ரிலீஸ்… பரபரக்கும் வலிமை பட டீம்…
விரைவில் டீசர்.. தீபாவளிக்கு முன்பே ரிலீஸ்… பரபரக்கும் வலிமை பட டீம்…
போனிகபூர் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் யுடியூப்பில் அந்த வீடியோ டிரெண்டிங்கில் இருக்கிறது.
வலிமை திரைப்படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.. ஏற்கனவே கடந்த வருடம் பொங்கலின் போது ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் என 2 திரைப்படங்களும் மோதியது. இதில், பேட்டையை விட விஸ்வாசம் அதிக வசூ ஈட்டியது. எனவே, சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் மோதிக்கொண்டனர். எனவே, இதை தவிர்க்க நினைக்கும் அஜித் தீபாவளிக்கு முன்பே இப்படத்தி வெளியிடலாம் என கருதுகிறாராம். அநேகாமக வினாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், முக்கிய அப்டேட்டாக வலிமை படத்தின் டீசர் வீடியோவை ஆகஸ்டு 15 சுதந்திரன் தினத்தன்று வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
வலிமை ஃபர்ஸ்ட்லு, மோஷன் போஸ்டர், டீசர், ரிலீஸ் என படக்குழு வேகமெடுத்துள்ளதால் அஜித் ரசிகர்கள் இனிமேல் தூங்கமாட்டாரக்ள் என்பது குறிப்பிடத்தக்கது.