இங்கதான் பிளாப்.!.. ஆனா ஜப்பானில் ஹிட் அடித்த ரஜினியின் ‘தர்பார்’..

Published on: July 19, 2021
---Advertisement---

c00dbc6503b4b501844cc1e406c569fb

ரஜினிக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழகத்தில் ரஜினி திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஜப்பானில் இருந்து சென்னை வந்து படம் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார். ரஜினி நடித்த முத்து, படையப்பா, சிவாஜி உள்ளிட்ட சில படங்கள் ஜப்பான் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜாக்கிசான் இங்கு தமிழ் பேசுவது போல ரஜினி அங்கு ஜப்பான் மொழி பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாம் டப்பிங்கில் சாத்தியம்.

33afdd804087581578fe73b6ec07a428

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியான தர்பார் திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியாகி அங்கு சக்கை போடு போட்டு வருகிறது. அப்படம் வெளியான தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியை பொறுத்தவரை ‘தர்பார்’ திரைப்படம் ஒரு தோல்விப்படமாகும். அப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதன்பின் பிறகுதான் எப்ப்டியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் கல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

50ac2fbcffc5890694eebdaa8abd197c-3-2

Leave a Comment