என் மகளுக்கு அரசியல் தெரியாது; அவரை விட்டுவிடுங்கள் – டிவிட்டரில் கங்குலி வேண்டுகோள் !

Published On: December 19, 2019
---Advertisement---

37d10f72de282174ad5323c048d2cc7c-1

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் சனா கங்குலி தனது பதிவை நீக்கியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அவர் தனது டிவிட்டரில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தெ எண்ட் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்தார்.

அதனைப் பலரும் பகிர கங்குலி தனது டிவிட்டரில் ‘இந்த பிரச்சனைகளில் இருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலை பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது.’ எனக் கூற அந்த பதிவும் நீக்கப்பட்டுள்ளது.

Leave a Comment