மக்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது – பட்ஜெட் குறித்து கமல் நக்கல் !

Published on: February 1, 2020
---Advertisement---

188239dfee941e7443249eadcdfab203

2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நடப்பு ஆண்டுககான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தனிநபர் வருமான வரி, வங்கியில் முதலீடு செய்பவர்கள் ஆகியவருக்கு சாதகமாக சில மசோதாக்கள் அறிவிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

இந்த பட்ஜெட்டை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ‘அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்துள்ளது. நீண்ட உரை ஆற்றப்பட்டாலும் தீர்வுகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை’ என நக்கலாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment