
தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நடிகை குஷ்பு. திமுக, காங்கிரஸ் என கட்சி மாறி தற்போது பாஜகவில் இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் டிவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘3 நாட்களுக்கு முன்பு என்னுடைய டிவிட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்துவிட்டனர். எனவே, டிவிட்டர் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். எனவே, என் டிவிட்டரில் வரும் பதிவுகள் நான் பதிவிட்டது கிடையாது என அவர் பதிவிட்டுள்ளார்.
டிவிட்டரில் அவரின் முகப்பு படங்கள் மாற்றப்பட்டதுடன், ட்வீட்டுகளும் நீக்கப்பட்டுவிட்டது. மேலும், அவரின் பெயரை BRIANN எனவும் மாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்திலும் குஷ்பு புகார் அளித்துள்ளார்.





