
தமிழ் சினிமாவில் இளம் வயதில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நாயகியாக படங்கள் நடித்த இவர் திருமணம் செய்துகொண்டு கேமரா பக்கம் வராமல் இருந்தார். அவ்வப்போது சில சர்ச்சை செய்திகளில் அடிபட்டார். சினிமா விஷயங்களை தாண்டி சொந்த விஷயங்களால் அதிகம் வனிதா விமர்சனம் செய்யப்பட்டார்.

பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் நடந்து கொண்டது பிடிக்காமல் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதோடு And.. என குறிப்பிட்டு சில ஹார்ட்டின் குறிகளையும் இட்டுள்ளார். சமீபத்தில் வனிதா விஜயகுமார் S என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவருடன் 4வது திருமணம் செய்து கொள்வார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

எனவே, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா?.. இது நிஜமா இல்லை படமா என்றே தெரியலையே என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும், இது கண்டிப்பாக வனிதா நடிக்கும் ஒரு புதிய படத்தின் புரமோஷன் என்றுதான் பலராலும் கருதப்பட்டு வருகிறது.
And…❤️❤️❤️❤️ @powerstarhere pic.twitter.com/UXKaFiNJic
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 21, 2021





