Cinema News
தமிழ் சினிமாவின் பாகுபலி…! படம் எப்பொழுது…? களமிறங்க காத்துக்கொண்டிருக்கும் சுந்தர்.சி…
தமிழ் சினிமாவில் ஏராளமான கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி. இவர் நீண்ட நாள்களாகவே சரித்திர காவிய படத்தின் கதையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்க அதற்கு அஸ்திவாரமும் 2016 ஆம் ஆண்டு போடப்பட்டது.
மிகப்பெரிய பொருட்செலவில் 300 கோடி பட்ஜெட்டில் நட்சத்திர பட்டாளம் படை சூழ ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுக்க திட்டமிட்டார். ‘சங்கமித்ரா’ என்ற தலைப்புடன் கூடிய அந்த படம் கிட்டதட்ட 8 வது நூற்றாண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டது. ஜெயம் ரவி, ஆர்யா, சுருதிஹாசன், உட்பட பலரும் நடிப்பதாக இருந்து படத்தின் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
படம் பிரமாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சிகளை பிரான்ஸில் நடந்த கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டனர். படத்திற்கு ஏஆர். ரகுமான் தான் இசையமைக்க தயாராக இருந்தார். ஒரு வேளையாக சூட்டிங் ஆரம்பமாகும் என எதிர்பார்க்க ஏதோ ஒரு வித காரணங்களாக இன்று வரை இன்னும் தொடங்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கமித்ரா படத்தை பற்றி சுந்தர்.சி பேசியுள்ளார். சங்கமித்ரா படம் எப்பொழுது எடுத்தாலும் அதுதான் மிகச்சிறப்பான படமாக இருக்கும். ஏன் உலக சினிமா வரலாற்றிலயே அதுதான் நம்பர் ஒன் படமாக விளங்கும். அடிச்சு சொல்றேன் அந்த படத்திற்கு ஈடுகட்ட வேறு எந்த படமானாலும் முடியாது என கூறி கூடிய சீக்கிரம் படப்பிடிப்புகளை ஆரம்பிக்க இருக்கிறோம் என கூறினார். பாகுபலி படம் எப்படி தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியதோ அதற்கு மேல் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தும் என்கிற தோணியில் சுந்தர்.சி கூறியுள்ளார். கூடிய சீக்கிரம் தமிழ் சினிமா இவரால் ஆவது பெருமை கொள்ளட்டும்.