
தனுஷ் நடித்த அசுரன் மற்றும் பட்டாஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான சுருளி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அவர் கர்ணன் என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நெல்லை பகுதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சுருளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வரும் 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒய்நாட் ஸ்டூடியோ தனது டுவிட்டர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த படத்தை வரும் மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் தனது ரசிகர்களுக்கு சுருளி படத்தை விருந்தாக கொடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சஞ்சனா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது