
Cinema News
’வந்தியத்தேவனை’ விட மாஸ் காட்டும் ரோலக்ஸ்…! பொன்னியின் செல்வன் படத்தை கையில் எடுத்த சூர்யா…!
Published on
By
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல். பிரபலமான இந்த வரலாற்று நாவலை நம் கண்முன் காட்ட காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகமாக தயாரிக்கப்பட்ட இந்த நாவலின் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை லைக்கா புரடக்ஷனுடன் மணிரத்னமும் சேர்ந்து தயாரித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வரிசையாக படக்குழு வெளியிட்டுக் கொண்டிருக்கையில் அதை பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி இவர்களின் கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியிட்ட நிலையில் இன்று ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்திருக்கும் போஸ்டர் வெளியாக உள்ளது. மேலும் கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழி சூப்பர் ஸ்டார்களை வைத்து படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்ட மணிரத்னம் தமிழில் நடிகர் சூர்யா தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீஸரை வெளியிட உள்ளாராம். ஏதாவது ஒரு விதத்தில் அண்ணனும் தம்பியும் இணைந்து கொள்கின்றனர்.
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...