
நடிகர் விஷாலும், ஆர்யாவும் வாடா போடா நண்பர்கள். ஆனால், இருவரும் மோதிக்கொள்ளும் திரைப்படமாக ‘எனிமி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் மிர்னாளினி ரவி மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில்,இப்படத்தின் டீசர் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
#ENEMY Starring @VishalKOfficial & @arya_offl Poster looks apoplectic & Teaser from Tomorrow Evening 6 P.M#ENEMYTEASER pic.twitter.com/qc241RAuRS
— Ram Muthuram Cinemas (@RamCinemas) July 23, 2021





