செம மெர்சலான ‘ஜெய் பீம்’ 2வது லுக் போஸ்டர்… அதிரும் இணையதளம்.

Published on: July 23, 2021
---Advertisement---

0cd0bce0e395173119bf0551ca1c0721-1

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில், வேஷ்டி சட்டை அணிந்து, கையில் வாள் பிடித்து சூர்யா அதகளம் செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. மேலும், இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டது. 

be28bb679bbd748da6105681c2ccfcaa

ஒருபக்கம் சூர்யா 39 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இன்று வெளியானது. இப்படத்திற்கு ஜெய்பீம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளர். இருளர் இனத்தவருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.  இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமானத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

07eb93780d80b9197f101dfdc3399c73-1-2

Leave a Comment