
பளபளவென்றும் பொசுபொசுவென்றும் வெள்ளை வெளேர்னு பார்க்க அழகு பதுமையாக இருக்கும் நடிகை தான் ரேஷ்மா பசுபுலட்டி. இவர் 23.7.1977ல் சென்னையில் பிறந்தார்.

இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா? ஆம்…ரேஷ்மா பசுபுலட்டி பிக்பாஸ் சீசனில் நுழைந்ததும் வேற லெவலுக்குச் சென்று விட்டார். விமானப்பணிப்பெண்ணாக வேலை செய்த ரேஷ்மா சினிமா மோகத்தால் அதை விட்டு விட்டு டிவியில் தொகுப்பாளினியாக வேலை செய்தார். மேலும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர் முதன் முதலில் சன் டிவியில் வம்சம் தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். மீ டூ இயக்கத்தின் ஆதரவாளர். இவர் மாடலிங்காகவும் இருந்துள்ளார். நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் இவர்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்டா படத்தில் சூரியின் மனைவியாக நடித்தார் ரேஷ்மா பசுபுலெட்டி. இதில் புஷ்பா கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன்னா நீங்க தானே என்ற டயலாக் செம மாஸானது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது வாழ்க்கையில் நடந்த சோகங்களைக் கூறி பெண்கள் மனதில் இடம்பிடித்தார். பிக்பாஸ்; வீட்டில் 42 நாள்கள் இருந்த இவர் பின்னர் எவிக்சன் செய்யப்பட்டு வெளியேறினார்.

சாந்தனு, அதுல்;யா ரவி நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது. வணக்கம்டா மாப்பிள, சத்தியசோதனை ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக சமீபகாலமாக நிறைய நடிகைகள் கவர்ச்சி கோதாவில் குதித்துவிட்டனர். அதாவது வீட்டிலேயே இருந்து தங்களது உடல் அழகை கவர்ச்சிகரமாக போட்டோ ஷ_ட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். இதற்கு ரேஷ்மா மட்டும் விதிவிலக்கல்ல. ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அங்கங்கள் செழிப்பாகத் தெரிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து விட்டார்.

மசாலா படம், கோ 2, மணல் கயிறு 2,முருங்கைக்கய் சிப்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சன் டிவியில் சன் சிங்கர், வம்சம், வாணி ராணி, மரகதவீணை நிகழ்ச்சியிலும், ஜீ டிவியில் உயிர் மெய் தொடரிலும், ராஜ் டிவியில் என் இனிய தோழியே விலும், விஜய் டிவியில் ஆண்டாள் அழகர், பிக் பாஸ் 3 என்ற தொடரிலும் நடி;த்து வந்தார். ஷஷ
ரேஷ்மாவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





