அப்பா ஆனார் நடிகர் ஆர்யா….. குவியும் வாழ்த்துக்கள்….

Published on: July 24, 2021
---Advertisement---

8f4d1dd156131988c606b60963ce260d-3

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆர்யா. அவரது நடிப்பில் 2 நாட்களுக்கு முன்பு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஆர்யாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

0b9c61d4173c1fb9f3155aebbfd7abdd

தற்போது அவருக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆமாம். அவர் அப்பா ஆகியுள்ளார். ஆர்யா நடிகை சாயிஷாவை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூட தெரிவிக்கவில்லை. ஆர்யாவும் அந்த தகவலை ரகசியமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.  இந்த தகவலை நடிகரும், ஆர்யாவின் நண்பருமான விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து திரைபிரபலங்களும், ரசிகர்களும் ஆர்யா – சாயிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment