திரைப்படமாகும் பிரியங்கா கொலை வழக்கு – களத்தில் இறங்கிய முன்னணி இயக்குனர்!

Published on: February 2, 2020
---Advertisement---

4eca9f0619dc9c63e8f09f49adf9f429-1

ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவத்தை திரைப்படமாக எடுக்க இருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

சில மாதங்களுக்கு முன்னதாக ஐதராபாத்தில் 4 நபர்களால் நள்ளிரவில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார் கால்நடை மருத்துவர் பிரியங்கா. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் நால்வரும் போலிஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவத்திற்கு ஆதரவும் கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இந்த சம்பவத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா திஷா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். அதில் இதுபோனற சம்பவனங்களின் போது வெளிவராத உண்மையை பேசப்போவதாக அவர் சொல்லியுள்ளார். ராம்கோபால் வர்மா குற்றப்பின்னணி உள்ள கதைகளை இயக்குவதில் பேர்போனவர் என்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளார்.

Leave a Comment