Connect with us

Cinema News

என்னய்யா பெரிய ராக்கி பாய்.?! எங்க கேப்டன் அப்போவே என்ன செஞ்சிருக்காருனு பாருங்க…3

தற்போது எல்லாம் ஒரு பெரிய ஹீரோ ஒரு படத்தில் நடிக்க ஒப்பு கொண்டால் பெரும்பாலும் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னரே முக்கால்வாசி பணத்தை பெற்று விடுகின்றனராம். ஒரு சில நடிகர்கள் மட்டுமே சூட்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் பணத்தை வாங்கி கொள்கின்றனர். இருந்தும் பெரும்பாலும் நடிகர்கள் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் முழு பணத்தையும் செட்டில் செய்து விட சொல்கின்றனர்.

இப்படி தமிழ் ஹீரோவை தமிழ் சினிமா பிரபலங்கள் நொந்து கொண்டிருக்கும் வேளையில், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் திரைப்படத்திற்கு கன்னட நடிகர் யாஷ் தனது சம்பளத்தின் ஒரு சில தொகையை மட்டும் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு, படம் ரிலீசான பிறகு தான் முழு பணத்தையும் பெற்றுக் கொண்டாராம் .இந்த செய்தியை தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர் சில தமிழ் சினிமா பிரபலங்கள்.

ஆனால், இதனை எப்போதோ விஜயகாந்த் செய்து விட்டார் என்று தற்போது ஆதாரம் வெளியாகி உள்ளது. விஜயகாந்தை வைத்து புதிய தீர்ப்பு எனும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அண்மையில் ஒரு நேர்காணலில் விஜயகாந்த் பற்றி பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில் புதிய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பிக்கும்போது விஜயகாந்த்திற்கு வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே அட்வான்ஸாக கொடுத்து இருந்தோம். பிறகு சூட்டிங் ஆரம்பித்து முடியும் தருவாயில் வரையில் அவருக்கு பேசிய சம்பளம் 2 அரை லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் கொடுத்திருந்தோம். மீதம் 50 ஆயிரம் கொடுக்கவில்லை.

இதையும் படியுங்களேன் –  தளபதி 67 இயக்குனர் லோகேஷ் இல்லையாம்… ‘அந்த’ இரட்டையர்கள் தானாம்… ஷாக்கிங் சீக்ரெட்…

அந்த சமயம் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனை கவனித்த கேப்டன் விஜயகாந்த் எனக்கு நீங்கள் இதுவரை கொடுத்த பணம் போதும். மீதி பணம் எனக்கு தேவையில்லை என்று பெருந்தன்மையாக விட்டு கொடுத்தாராம்.

தயாரிப்பாளரின் கஷ்டத்தை அறிந்து நடந்து கொள்ளும் தமிழ் ஹீரோக்களில் மிக முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் பற்றி சித்ரா லட்சுமணன் பேசி இருந்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top