
தமிழ் சினிமாவில் அஜித், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை இயக்கி பெரிய இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இவர் இயக்கிய ரமணா, துப்பாக்கி, கத்தி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரஜினி ரசிகர்களை மட்டுமே கவர்ந்ததால் பெரிய வெற்றிப்படம் ஆகவில்லை. அதன்பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், கதை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால் அப்படத்திலிருந்து முருகதாஸ் வெளியேறினார். அதன் பின்னரே நெல்சன் விஜயை இயக்க ‘பீஸ்ட்’ திரைப்படம் துவங்கியது.

ஆனாலும், முருகதாஸிடமிருந்து எந்த புதிய பட அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது அவர் தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து முருகதாஸ் இதுவரை சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதேபோல், எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கும் புதிய படத்தை அவர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் சரத்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.
முருகதாஸ் தயாரிப்பில் வெளியான பெரும்பலான திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை. எனவே, இந்த முறை எப்படியாது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என களம் இறங்கியுள்ளாராம்..





