
தமிழ் சினிமாவில் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆதி. தன் பெயரை ஹிப்ஹாப் தமிழா என மாற்றிக்கொண்டார். ஒருகட்டத்தில் திரைப்படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். தனி ஒருவன், ஆம்பள உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். திடீரென நடிகர் அவதாரமும் எடுத்தார். மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது சிவக்குமாரின் சபதம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இவரின் யுடியூப் சேனலை சில மர்ம ஆசாமிகள் முடக்கிவிட்டனர். அவரின் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளது. அவரின் யுடியூப் சேனலை 20 லட்சம் பேர் பின்பற்றி வந்தனர்.
சமீபத்தில் நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான குஷ்புவின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. எனவே, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவர் தனது டிவிட்டர் பக்கத்தை மீட்டார். எனவே, ஆதியும் காவல்துறையின் உதவியை நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#HiphopTamizha YouTube channel has been hacked. It has more than 2 Million Subscribers. Hoping @YouTubeIndia to take necessary action as soon as possible. @hiphoptamizha pic.twitter.com/dKYHekpJLY
— Sathish Kumar M (@sathishmsk) July 26, 2021





