விஜய்க்கு கிடைத்த வெற்றி!…சொகுசு கார் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….

Published on: July 27, 2021
---Advertisement---

354d3e0520c0fddb7043472b8273d8a3

விஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் செய்தார். இந்த காருக்கு செலுத்தும் நுழைவு வரி தொடர்பாக விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்தார். இதையடுத்து, விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நாம் தமிழர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து தன்னை பற்றி நீதிபதி வைத்த விமர்சனத்திற்கு எதிராக விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். விஜயின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

31f1e83d5417e36567b138b1beb92e5e

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து 2 அமர்வு கொண்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  மேலும், ஏற்கனவே அவர் 20 சதவீத வரியை செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள 80 சதவீத வரியை அடுத்த ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனி நீதிபதி கூறிய விமர்சனங்களை நீக்க கோருவது பற்றி அடுத்தக்கட்ட விசாரணையில் முடிவு எடுக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment