இன்று 5 ஆவது போட்டி – ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா ?

Published on: February 2, 2020
---Advertisement---

91b0e79d7789c61bb0574a325ed55a25

நியுசிலாந்துக்கு எதிராக இன்று நடக்க இருக்கும் 5 ஆவது டி 20 போட்டியில் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபப்டும் எனத் தெரிகிறது.

Also Read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரில் தலையில் அடிபட்டு கன்கஷன் ஏற்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக கே எல் ராகுல் கீப்பிங் செய்தார். அதன் பின்னர் தற்போது நடந்து வரும் நியுசிலாந்து தொடரின் முதல் 4 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றுவிட்டதால் இன்று நடக்கும் 5 ஆவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல காயத்தில் இருந்து குணமாகியுள்ள ரிஷப் பண்ட்டுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment