எனக்கு நெஞ்சில் பிரச்சனை இருந்தது உண்மை தான்… ஆனால்.? மேடையில் உளறிய சியான் விக்ரம்…

Published on: July 12, 2022
---Advertisement---

அஜய் ஞானமுத்து இயக்கிய “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சியான் விக்ரம் நேற்று நடைபெற்ற ‘கோப்ரா’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், சியான் விக்ரம் நெஞ்சுவலியால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் ஜூலை 10 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், விக்ரம் மருத்துவமனை சென்ற செய்தி சிறிது நேரத்தில் வைரலானது. அதாவது, விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதனையடுத்து, நடிகர் விக்ரமின் மேலாளர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையும் படிங்களேன் – 150ஆம் நாளை நோக்கி சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

இந்நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பரவிய வதந்திகளைப் பற்றி சிரிப்புடன் பேசினார், “நான் பார்த்தேன், எல்லா அறிக்கைகளையும் பார்த்தேன். பலர் எனது புகைப்படத்தை ஒரு நோயாளியின் உடலில் மார்பிங் செய்து வைத்திருந்தனர்.

ஆனால், அவர்கள் செய்த அந்த படைப்பாற்றலை கண்டு வியந்தேன் அது நன்றாக இருந்தது. நன்றி….. நான் வாழ்க்கையில் நிறைய அனுபவித்ததாக உணர்கிறேன், அதனால் இது பெரிய கவலை இல்லை. எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவாக உள்ளனர். என் வாழ்க்கையில் இத விட வேறு எதுவும் தேவையில்லை என கேஸூலாக பேசினார். மேலும், லேசான மார்பு அசௌகரியம் இருந்தது, ஆனால் அதற்காக இப்படி அதுஇதுனு வதந்தியை பரப்பிட்டாங்க என்று தனது உரையை முடித்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.