சினிமாவில் வந்த நீ……ளமான படங்கள் – ஓர் சிறப்புப் பார்வை

Published on: July 28, 2021
---Advertisement---

0450a4afa55c7497306f0eb9ce57ff5a

சினிமாக்குப் போனா டைம் வேஸ்ட் டா…இரண்டரை மணி நேரம் நம்மை எதுக்கு வேஸ்டாக்கணும்னு சொல்வார்கள் சில அறிவார்ந்த நண்பர்கள். சிலர் படத்துக்குப் போய்விட்டு இருக்கையில் அமர முடியாமல் நெளிவார்கள். என்னன்னு கேட்டா…படமாடா எடுத்துருக்கான்…ஜவ்வா இழுக்கறான்டா…அட போடா…அவனே கதையை எப்படி முடிக்கறதுன்னு தெரியாம திணறுறான் என எப்போ படம் முடியும் என்று இருக்கு…சுத்த அறுவைப்படம் னு சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

பெரும்பாலும் படங்களில் பாடல்கள் வந்தால் போதும்…தியேட்டரில் இருந்து வெளியே வந்து தம் அடிக்க வந்து விடுவார்கள். சில படங்களைப் பார்க்கும்போது அட…அதுக்குள்ள முடிஞ்சிருச்சா என்றாற்போல் இருக்கும். சில படங்கள் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காகவும் இருக்கும்…படமும் பெரிய படமா இருக்கும். நேரம் போனதே தெரியாத அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட படங்கள் தான் தமிழ் சினிமாவில் புரட்சிக்கு வித்திட்டவை. கதையோட்டம் நம்மை அப்படியே இருக்கையில் கட்டிப்போட்டு விடும். 

உதாரணமாக எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன். இந்தப்படத்தைத் தான் தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய படம்…அதாவது ரொம்ப நேரம் ஓடக்கூடிய படம் என்பர். இது கிட்டத்தட்ட 3.30 மணி நேரம்  ஓடும். படமும் பரபரப்பாகச் செல்லும். 

தவமாய் தவமிருந்து படம் 3.24 மணி நேரம் ஓடியது. கந்தசாமி படம் 3.17 மணி நேரம் ஓடியது. ஹேராம் படம் 3.30 மணி நேரமும், சம்பூர்ண ராமாயணம் படம் 3.24 மணி நேரமும், நான் படம் 3.22 மணி நேரமும் ஓடியது. அதே போல் 1958ல் வெளியான பதிபக்தி படம் 3.16 மணி நேரம் ஓடியது. 1961ல் வெளியான பாவமன்னிப்பு படம் 3.16 மணி நேரம் ஓடியது. அஞ்சாதே படம் 3.10 மணிநேரமும், இசை படம் 3.09 மணி நேரமும், நண்பன் படம் 3.08 மணி நேரமும் ஓடியது.

காதல் கொண்டேன் படம் 3.05 மணி நேரம், 7ஜி ரெயின்போ காலனி படம் 3.05 மணி நேரம், கஜினி படம் 3.05 மணி நேரம், வல்லவன் படம் 3.05 மணி நேரமும், சிவாஜி தி பாஸ் படம் 3.05 மணிநேரமும் தசாவதாரம், இந்தியன் படங்கள் 3.04 மணி நேரமும் ஓடின. 

தலைவா படம் 3.01 மணி நேரமும்,  ஆயிரத்தில் ஒருவன் படம் 2.34 மணி நேரமும் ஓடின. பாசமலர் 3 மணி நேரமும், பிகில் 2.59 மணி நேரம், பாசமலர் படம் 3 மணி நேரம், ரமண்ணா 3 மணி நேரம் ஓடிய படம். 

பாபநாசம் மற்றும் லிங்கா தலா 2.58 மணி நேரமும், மாஸ்டர் 2.58 மணிநேரமும், சூப்பர் டீலக்ஸ் படம் 2.57 மணி நேரம் ஓடின. சார்பட்டா பரம்பரை 2.55 மணி நேரம் ஓடின. 

இவற்றுள் சில படங்கள் உங்கள் பார்வைக்கு… 

நாடோடி மன்னன் 

81e3a5e6acfab57350f3d8f120cfae45

எம்ஜிஆருக்கு அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். படம் பட்டையைக் கௌப்பியது. வசனங்களும் சரி. பாடல்களும் சரி. எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிப்பில் வெளுத்து வாங்கிய படம். இந்தப்படத்தை தயாரித்து இயக்கியவர் எம்ஜிஆர்தான். எஸ்.எம்.சுப்பையா நாயுடு, என்.எஸ்.பாலகிருஷ்ணன், ஆத்மானந்தன் ஆகியோர் இசை அமைத்திருந்தனர். 
எம்ஜிஆர், நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, சகுந்தலா, சரோஜாதேவி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். 1958ல் ரிலீஸானது. இப்படம் அந்த காலத்திலேயே ரூ.1கோடி வசூலித்து சாதனை படைத்தது.

கண்ணில் வந்து மின்னல், சும்மா கெடந்த, தூங்காதே தம்பி, உழைப்பதில்லா, தடுக்காதே, மண்ணை தேடி மச்சான், கண்ணோடு கண்ணு கலந்தாச்சு, பாடுபட்டதனாலே ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. இப்பாடல்களில் சும்மா கெடந்த என்று தொடங்கும் பாடலில் எம்ஜிஆர் அப்போதே நானே போடப்போறேன் சட்டம்…பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் நன்மை புரிந்திடும் திட்டம் என்று ஆருடம் சொல்லியிருப்பார். 

பாசமலர் 

e73ecbfa1719dfd04ae4ce24961253a0-2

1961ல் வெளியான இப்படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். சிவாஜி, சாவித்திரி, ஜெமினிகணேசன் நடித்துள்ளனர். இப்படம் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டது. இப்படத்தைப் பார்க்க தியேட்டருக்குச் செல்பவர்கள் அனைவரும் அண்ணன் தங்கை பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போய் கண்ணீர் வடித்து விட்டுத்தான் வெளியே வருவர்.

பாட்டொன்று கேட்டேன், யார் யார் யார் அவள், மலர்களைப் போல், அன்பு மலர், எங்களுக்கும் காலம் வரும், மயங்குகிறாள் ஒரு, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், மலர்ந்து மலராத, வாராய் என் தோழி ஆகிய பாடல்கள் மக்களின் மனதை விட்டு இன்று வரை உள்ளது. இப்படத்தின் இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

ஹேராம் 

81aada4a3a974668d9a2df930e4fd1fb-2

2000ல் வெளியான இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து இயக்கிய படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். கமல்ஹாசன், ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வசுந்தரா தாஸ், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக இளையராஜா சிம்பொனி இசை அமைத்துள்ளார்.

ராம், ராம், நீ பார்த்த, பொல்லாத மதன பானம், வாரணம் ஆயிரம், வைஷ்ணவ ஜன தோ, இசையில் தொடங்குதம்மா, சந்நியாச மந்திரம், ராமரானாலும், பாபரானாலும் ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் 3 பாடல்களை கமல் பாடியிருப்பார்.

இப்படத்திற்காக 3 தேசிய விருதுகள் கிடைத்தன. தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை கமல்ஹாசன் பெற்றார். 64வது பெங்கால் பிலிம் ஜர்னலிஸ்ட் அசோசியேசன் விருதை 2000 ஆண்டுக்கான சிறந்த கலைஞர் விருதை கமல் பெற்றார்.  

தசாவதாரம் 

083d0de33b2b7f593a629afea4db12a9

2008ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் பிரம்மாண்டமாக உருவானது. கமல்ஹாசன், கிரேசி மோகன், சுஜாதா வசனம் எழுதினர். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை கமல் எழுதினார். ஹிமேஷ் ரேஷ்மியா இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. இப்படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 10 வேடங்களில் நடித்து அசத்தினார். கமல்ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத், அதுல் குல்கர்னி உள்பட பலர் நடித்தனர்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியான சுனாமியானது நிஜமாகவே நம் முன் வருவது போல் தத்ரூபமாக அமைத்து இருந்தனர். 

உலக நாயகனே, கல்லை மட்டும் கண்டால், ஓ..ஓ…சனம், முகுந்தா முகுந்தா, கா…கருப்பனுக்கும் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
  
கஜினி

fb0387b1245a6cc1bc75d45a200afef8-4

 

2005ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்தனர். 2008ல் இதே பெயரில் இப்படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியானது. அங்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் தரமானவை. சூர்யா, அசின், நயன்தாரா உள்பட பலர் நடித்தனர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட சூர்யாவைக் காணலாம். ஒரு மாலை, எக்ஸ் மச்சி, சுட்டும் விழி சுடரே, ரஹத்துல்லா, ரங்கோலா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 

Leave a Comment