மாதவிடாய் நேரத்தில் அத பண்ணேன்… ஒப்பான கூறிய சாய்பல்லவி – ஆடிப்போன தனுஷ் ரசிகர்கள்!

Published on: July 12, 2022
---Advertisement---

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து அழகு பதுமை என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோயினுக்கு ஏற்ற எந்த பந்தாவும் காட்டாமல் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிம்பிளான ஹீரோயினாக ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ’கார்கி’ என்ற திரைப்படத்தில் சாய்பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

saai pallavi 1
saai pallavi 1

இந்த படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும் அவர் தொடர்ச்சியாக பிரபலமான யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், மாதவிடாய் காலத்தில் தான் பெரும்பாலும் நடனமாடியிருக்கிறேன் எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்: இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு… நயன்தாராவின் புதிய படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

sai pallavi 2
sai pallavi 2

தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய போது நான் மாதவிடாய் காலத்தில் தான் இருந்தேன் என தொழிலின் மீது தான் வைத்துள்ள ஆர்வத்தையும் மரியாதையும் வெளிப்படையாக கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.