அதற்குள் விருதா? அடிச்சு தூக்கு!…சார்பட்டா பரம்பரைக்கு கிடைத்த அங்கீகாரம்…

Published on: July 28, 2021
---Advertisement---

369f594deadb57afce5c64e53461ccc0

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இப்படத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது கபிலன், வெற்றி, டான்ஸிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், வேம்புலி, மீரான், மாஞ்சா கண்ணன், மாரியம்மா, கெவின் டாடி என கதாபாத்திர படைப்புகளை ரஞ்சித் சிறப்பாக அமைத்துள்ளார். அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். 

eb79d4254da975650d2a5607970556dc

இந்நிலையில், Film companion எனும் நிறுவனம் சார்பாக சிறந்த படத்திற்கு வழங்கப்படும் FC GOLD என்கிற அங்கீகாரம் சார்பட்டா திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த தகவலை சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Leave a Comment